கள்ளக்காதலனுடன் சேர்த்துப் பார்த்து விட்ட தம்பியை.. உயிருடன் எரித்துக் கொன்ற அக்கா!
லக்னோ: உ.பி. மாநிலம் புலந்த் சாகர் மாவட்டத்தில் தன்னையும், தனது கள்ளக்காதலனையும் சேர்த்துப் பார்த்து விட்ட தம்பியை உயிருடன் தீவைத்துக் கொளுத்தி விட்டார் அவனது அக்கா.
12 வயதேயான அந்த சிறுவன் துடிக்கத் துடிக்க உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்சாகர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு தாயும், மகளும் பாலியல் பலாத்கரம் செய்யப்பட்ட சம்பவத்தின் பாதிப்பே இன்னும் விலகாத நிலையில் தம்பியை சொந்த அக்காவே உயிருடன் வைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரித்துக் கொள்வதற்கு முன்பாக அந்த சிறுவனை அவனது அக்காவும், கள்ளக்காதலனும் சேர்ந்து குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவனைக் கொன்று எறித்து விட்டனர்.
லலித் என்ற அந்த 12 வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டில் இல்லை. வீட்டின் உள்ளே சத்தம் கேட்டுள்ளது. என்ன என்று பார்த்தபோது, அக்காவும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இன்னொரு வாலிபரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்துள்ளான் சிறுவன்.
சிறுவனின் அக்காவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். எங்கே தனது தம்பியை விட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுவானே என்ற அச்சத்தில் அவரும், அவரது கள்ளக்காதலரும் சேர்ந்து சிறுவனை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் தீவைத்துக் கொன்று விட்டனர்.
சிறுவன் தப்பி விடாமல் தடுப்பதற்காக அவனது கை, கால்களையும் கட்டிப் போட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளனர் இருவரும். பரிதாபமாக உயிரிழந்த சிறுவனை 2 வயதுதான் அந்தப் பெண் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications