காங்கிரஸின் அடுத்த வாரிசு இவரா? ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவை கவனிச்சீங்களா? யார் இந்த ரைஹான்?

Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ்.. நம் நாட்டின் பழமையான கட்சி. மத்தியில் பல முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி அதிகாரத்தை 2வது முறையாக இழந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 3 இலக்கத்தை தொடவில்லை.

ராகுல் காந்தி 2 தொகுதிகளில் வென்றதை சேர்த்து மொத்தம் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பிறகு வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தததால் தற்போது லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு பெரும் காரணமாக கூறப்படுவது வாரிசு அரசியலும், குடும்ப அரசியலும் தான்.

rahul gandhi congress raihan

நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி வரை தொடர்ந்து வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட ராகுல் காந்தி எம்பி பதவியை ராஜினாமா செய்த வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி தான் களமிறக்கப்பட்டுள்ளார். இப்படியாக வாரிசு அரசியல் என்பது பிரியங்கா காந்தி வரை நீண்டு வருகிறது. நேருவுக்கு பிறகு மகள் இந்திரா காந்தி, இந்திரா காந்திக்கு பிறகு மகன் ராஜீவ் காந்தி, ராஜீவ் காந்திக்கு பிறகு மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி வரிசையில் மகள் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

இத்தகைய சூழலில் தான் தனது குடும்பத்தில் அடுத்தக்கட்ட வாரிசை அரசியலுக்கு அறிமுகம் செய்யும் பணியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தீபாவளியையொட்டி ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ தான் காரணமாகும். அதாவது ராகுல் காந்தி தற்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவர் அடிக்கடி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வருகிறார். இதுதொடர்பான வீடியோக்கள் காங்கிரஸ் வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளியையொட்டி ராகுல் காந்தி தனது வீட்டை சுத்தம் செய்து பெயிண்ட் செய்யும் பணியில் சக பணியாளர்களுக்கு உதவி செய்தார்.

அதாவது ராகுல் காந்தி தற்போது தாய் சோனியா காந்தியுடன் வசித்து வருகிறார். இவர்கள் டெல்லியில் ஜன்பாத் பங்களா 10 என்று அடையாளம் காட்டப்படும் சோனியா காந்தியின் வீட்டில் தான் ராகுல் காந்தி உள்ளார். தீபாவளியையொட்டி இந்த வீட்டை சுத்தம் செய்து பெயிண்ட் அடிக்கப்பட்டது. இந்த பணியில் தான் ராகுல் காந்தி சக பணியாளர்களுடன் ஈடுபட்டார். அப்போது ராகுல் காந்தியுடன் இருந்த இளைஞர் தான் தற்போது கவனம் பெற்றுள்ளார். அதோடு ராகுல் காந்தி இந்த வீடியோ மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்த வாரிசை அறிமுகம் செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோவில் ராகுல் காந்தியுடன் இருந்தவர் பெயர் ரைஹான்.

இவர் யார் என்றால் தங்கை பிரியங்கா காந்தி - ராபர்ட் வத்ரா தம்பதியின் மகன் ஆவார்.இந்த தம்பதிக்கு மிராயா என்ற மகளும், ரைஹான் என்ற மகனும் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் ரைஹானை ராகுல் காந்தி வீடியோ முழுவதும் காட்டி உள்ளார். தீபாவளி பற்றியும், தீபாவளிக்கு கைவினை கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றியும் ராகுல் காந்தி அவருக்கு எடுத்து கூறுகிறார்.

ரைஹானுக்கு தற்போது 24 வயது ஆகிறது. இவர் விஷூவல் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார். இவர் வனவிலங்குகள், சாலைகள் தொடர்பான கமர்சியல் போட்டோகிராபி தொடர்பான தனது சொந்த படைப்புகளை கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி உள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த கண்காட்சிகளில் அதனை ரைஹான் கண்காட்சிக்கு வைத்துள்ளார். பொதுவெளியில் ரைஹான் அதிகமாக காணப்படுவது இல்லை. கடந்த மாதம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபோது ரைஹான் தனது தாய் பிரியங்கா காந்தி, தந்தை ராபர்ட் வத்ரா, தாய்மாமா ராகுல் காந்தி, பாட்டி சோனியா காந்தியுடன் காணப்பட்டார்.

அதன்பிறகு இப்போது ராகுல் காந்தியின் வீடியோவில் அவர் காட்டப்பட்டுள்ளது. மேலும் வீடியோ முழுவதும் ராகுல் காந்தி ரைஹானுடன் தோன்றியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி 5வது தலைமுறை வாரிசாக பிரியங்கா காந்தியின் மகன் ரைஹானை தேர்தலில் அறிமுகம் செய்ய உள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+