சோனம் சிக்க முக்கிய காரணமாக இருந்த ராஜா ரகுவன்ஷி கட்டிய "தாலி.." ஹனிமூன் கொலையில் இதுதான் ட்விஸ்ட்
ஷிலாங்: மேகாலயாவில் அரங்கேறிய ஹனிமூன் கொலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் சோனிற்கு ராஜா கட்டிய தாலி தான் திருப்புமுனையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்தும் அதன் பிறகு நடந்த விசாரணை குறித்தும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.என்.ஆர். மாரக் கூறியுள்ள சில முக்கிய தகவல்களை நாம் பார்க்கலாம்.
மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றபோது கணவர் ராஜாவை மனைவி சோனமே கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அவர் தனது காதலன் ராஜ் என்பவருடன் இணைந்து கூலி படையினருடன் இந்த கொலையைச் செய்துள்ளார். இதற்கிடையே இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

திருப்புமுனை
மேகாலயா போலீசார் இந்த தம்பதி தங்கியிருந்த ஹோட்டல் ரூமில் நடத்திய சோதனையில், கொலைக் குற்றவாளியான சோனம் விட்டுச்சென்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே விசாரணையில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்துள்ளது. வழக்கு எந்த திசையில் செல்கிறது என்பதை போலீசார் அறிந்து கொள்ள அந்த பொருள் தான் முக்கியமானதாக இருந்துள்ளது.
விட்டு சென்ற தாலி
இது தொடர்பாக மேகாலயா போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.என்.ஆர். மாரக் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது ஹோட்டல் ரூமை விட்டுக் கிளம்பும் முன்பு, சோனம் தனது தாலி மற்றும் ஒரு மோதிரத்தை அறையில் விட்டுச் சென்றிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஹோட்டல் ரூமில் சோனத்தின் தாலி மற்றும் ஒரு மோதிரம் சூட்கேஸில் இருந்ததைக் கண்டோம்.. அது எங்களுக்கு முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. புதிதாகத் திருமணம் செய்த ஒரு பெண் ஹனிமூன் போது தனது தாலியை ஏன் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே எங்களுக்கு முக்கிய கேள்வியாக இருந்தது" என்றார்.
கூலி படையினர்
சோனம் ஹனிமூனில் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை 3 கூலி படையினர் உதவியுடன் கொன்றதாகக் கூறப்படுகிறது. மற்றொரு குற்றவாளியும் இந்தூரைச் சேர்ந்த சோனமின் காதலரான ராஜா குஷ்வாஹா, இந்த கொலையைத் திட்டமிட உதவிய கூறப்படுகிறது. போலீசார் மேலும் கூறுகையில், "நாங்கள் முழுமையான, விரிவான விசாரணை நடத்தினோம். அனைத்து ஆதாரத்தையும் சேகரித்தோம். விசாரணையில் குற்றவாளிகள் தங்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்" என்றார்.
என்ன நடந்தது!
மே 23ம் தேதி போட்டோ எடுக்கலாம் எனச் சொல்லி ராஜாவை சோனம் விடுதியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் கிளம்பிவிட்டனர். இதையும் போலீசார் தங்கள் விசாரணையின் போதே கண்டுபிடித்தனர். அவர் மேலும் கூறுகையில், "வண்டியை நிறுத்திய பிறகு போட்டோ எடுப்பது போலச் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது கூலி படையினர் பின்னால் வந்து ராஜாவைக் கொன்றனர்.. கொலையாளிகள் இரண்டு ஸ்கூட்டர்களில் வந்தனர்.
தப்பித்தது எப்படி
கொலை செய்த பிறகு சோனம் அவர்களின் ஸ்கூட்டரிலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.. அவர்கள் ராஜாவின் உடலை மாவ்லாகியாட் என்ற இடத்திற்கு எடுத்துச் சென்று அங்குள்ள பள்ளத்தாக்கில் வீசினர்.. உடலைப் பள்ளத்தாக்கில் வீச சோனம் தங்களுக்கு உதவியதாக மற்ற குற்றவாளிகள் கூறியுள்ளனர். ராஜா மற்றும் சோனம் இருவருக்கும் தலா இரண்டு மொபைல் போன்கள் இருந்தன, அதில் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.. காணாமல் போன மூன்று மொபைல் போன்களை தேடும் பணி நடந்து வருகிறது" என்றார்.
கொலைக்கான காரணம் குறித்து மாரக் கூறுகையில், "விசாரணை நடந்து வருகிறது, முழு விவரங்கள் பின்னர் தெரியவரும்" என்றார். இந்த கொலை வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications