நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் கோர்ட்டில் ஆஜர்-ஜாமீன் பெற்றனர்! சு.சாமி கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை அபகரித்ததாக பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவரும் அவரது மகனுமான ராகுல் காந்தியும் டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி ஜாமீன் பெற்றனர். அப்போது இருவரது பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த கோரிக்கையை நீதிபதி லாவ்லின் நிராகரித்தார். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் ரூ90 கோடி வரை கடன்களை பெற்றிருந்தது. இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி ரூ90 கோடியை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர். இதற்கு பிரதிபலனாக ரூ2,000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான சொத்துகளை சோனியாவும் ராகுலும் அபகரித்தனர் என்பது சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு.

சு.சுவாமி வழக்கு
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொருளாளர் மோதிலால் வோரா, செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட் உத்தரவு
இந்த வழக்கில் சோனியாவும் ராகுலும் ஆஜராக டெல்லி பெருநகர நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இவ்வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டதால் காலை முதலே டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. வட இந்திய டிவி சேனல்கள் சோனியா, ராகுலுக்கு ஜெயிலா? பெயிலா என பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தன.

சோனியா, ராகுல் ஆஜர்
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் டெல்லி பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் லாவ்லீன் முன் இன்று மாலை 3 மணிக்கு சோனியாவும் ராகுல் காந்தியும் ஆஜராகினர். இருவரும் இந்தியா கேட் அருகேயே காரில் இருந்து இறங்கிக் கொண்டனர். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்துக்கு இருவரும் நடந்து வந்தனர்.

6 நிமிட விசாரணை
இருவருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். மொத்தம் 6 நிமிடங்களிலேயே இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

நிபந்தனையற்ற ஜாமீன்
சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு ரூ50,000 உத்தரவாத பிணைத் தொகையில் எந்த ஒரு நிபந்தனையுமே விதிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டது. சோனியாவுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தியும் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

சு.சுவாமி கோரிக்கை நிராகரிப்பு
இந்த விசாரணையின் போது, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க அவர்களது பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நீதிபதி லாவ்லின் நிராகரித்தார்.

பிப்.20ல் விசாரணை
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சோனியா, ராகுல் ஆஜரானதையொட்டி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா மகள் பிரியங்கா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல், ஷீலா தீட்சித், அம்பிகா சோனி என பலரும் அங்கு குவிந்தனர்.

பலத்த பாதுகாப்பு
அதேபோல் இன்று காலை முதலே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த கமாண்டோ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தப்பி ஓடிய சு.சுவாமி
இந்த வழக்கைத் தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மனைவியுடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த உடனேயே யாரையும் சந்திக்காமல் சுப்பிரமணியன் சுவாமி தப்பி ஓடிவிட்டார். பின்னர் டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வழக்கை தொடர்ந்ததில் எந்த அரசியல் பழிவாங்கலும் இல்லை; பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.

குலாம்நபி வீட்டில் ஆலோசனை
முன்னதாக குலாம்நபி ஆசாத் வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

சு.சுவாமிக்கு அரசு பங்களா
காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய கட்டாயத்தை சுப்பிரமணியன் சுவாமி உருவாக்கிய நிலையில் மத்திய அரசு அவருக்கு திடீரென அரசு பங்களாவை ஒதுக்கியது. எந்த ஒரு அரசுப் பதவியில் இல்லாத சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா வழங்கியது என்பதே இந்த வழக்கை போட்டதற்கான பரிசுதான் என காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications