மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர் : ஒடிசாவில் பயங்கரம்
மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் ஒடிசாவில் 2முறியடிக்கப்பட்டு உள்ளது.
பலாசூர் : ஒடிசா மாநிலத்தில் மந்திரவாதியின் பேச்சை நம்பி நீண்ட ஆயுளுக்காக உறவினர் ஒருவர் இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசா மாநிலம் பலாசூர் மாநிலத்தில் உள்ள பஞ்சபாடி கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் மல்லிக். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மயூர்பாஞ்ச் மாவட்டம் உடாலா நகரைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரின் தொடர்பு சமீபத்தில் கிடைத்து உள்ளது.

கைலாஷ் தன்னுடைய உடல் நலக்குறைவு குறைத்தும், அதை தீர்க்க வழி சொல்லுமாறும் அந்த மந்திரவாதியை அணுகி உள்ளார். அதற்கு அந்த மந்திரவாதி திருமணமாகாத இளம்பெண் ஒருவரை மந்திரம் ஓதி நரபலி கொடுத்தால், நீண்ட நாட்கள் வாழ முடியும் என்று கைலாஷிற்கு சொல்லி உள்ளார்.
இதனையடுத்து கைலாஷ் , அவரது நண்பர் மற்றும் மந்திரவாதி மூன்று பேரும் சேர்ந்து நேற்று முன் தினம் கைலாஷின் உறவுக்கார பெண் ஒருவரை அவரது வீட்டில் இருந்து கடத்தி நரபலி கொடுக்கும் இடத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.
இளம்பெண்ணின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை மீட்டு மூவருக்கும் தர்ம அடி கொடுத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மந்திரவாதி உட்பட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications