இந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்கள்.. டாப்பில் தென்னிந்தியா.. பின்னுக்கு சென்ற வடஇந்தியா
இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தென்னிந்தியா மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறது.
பெங்களூர்: இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தென்னிந்தியா மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் சிறந்த ஆட்சியைய் தரும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொது விவகார மையம் எனப்படும் பப்ளிக் அஃபயர்ஸ் செண்டர் இந்தியா என்ற பெங்களூரை சேர்ந்த அமைப்புதான் இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி வழங்குவதற்கும், திட்டங்களை மக்களை சென்று சேர்வதற்கும் இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு நிறுவப்பட்டது.

முதல் ஐந்து இடம் யாருக்கு
இதில் முதல் இடத்தில் கேரளா மாநிலம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தெலுங்கானா, கர்நாடகா, மூன்றாம் நான்காம் இடத்தில் உள்ளது. குஜராத் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த மூன்று வருடமாகவே இந்த முதல் நான்கு மாநிலங்களில் மாறி மாறி முன்னணி பட்டியலில் இடம்பிடித்து வருகிறது.

குஜராத் மட்டுமே
இந்த பட்டியலில் பெரும்பாலான முன்னணி இடங்களை தென்னிந்திய மாநிலங்களே பெற்றுள்ளது. முதல் பத்து இடங்களில் எல்லா தென்னிந்திய மாநிலமும் வந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் குஜராத் மட்டுமே தென்னிந்தியாவை சேராத மாநிலம் ஆகும் .

மிகவும் மோசம்
இதில் வடஇந்திய மாநிலங்கள் மிகவும் மோசமான இடத்தை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, பீகார், ஆகிய மாநிலங்கள் மிகவும் மோசமான இடத்தை அடைந்து இருக்கிறது. இதில் பிகார்தான் மிகவும் மோசமாக கடைசி இடத்தை பெற்றுள்ளது.

சிறிய மாநிலம்
அதே சமயத்தில் சிறிய வடஇந்திய மாநிலங்கள் வளர்ச்சி கண்டு இருக்கிறது. குறைந்த 2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட மாநிலங்கள், நல்ல வளர்ச்சி கண்டு இருக்கிறது. சிக்கிம், மிசோரம், நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலத்தில் நல்ல ஆட்சி நடப்பதாக கூறப்பட்டுள்ளது .
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications