தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது- பால் வார்த்த வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இரண்டு நாட்கள் முன்னதாகவே மே 28ஆம் தேதி கேரளாவில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்கு பருவமழை காலமாகும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. எதிர்பார்த்த அளவு மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.
வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனதால் வறட்சி தாண்டமாடுகிறது. நீர் நிலைகள் வறண்டு விட்டன. பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

கோடை மழை
வறட்சி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்ச்சியடையச் செய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை
ஆண்டு தோறும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே மாதம் 17ஆம் தேதி தொடங்கும் . ஆனால் இந்த ஆண்டு அது 3 நாட்களுக்கு முன்னதாகவே துவங்க வாய்ப்புள்ளது. இதற்கு ஏற்ப கால நிலையும் மேகக்கூட்டங்களும் அந்தமானை சுற்றி உருவாகி உள்ளன. இதனால் 14ஆம் தேதியே பருவமழை துவங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மே 28ல் பருவமழை தொடக்கம்
அந்தமானில் மழை பெய்ய துவங்கி 2 வாரங்களுக்குள் கேரளா பருவ மழையை சந்திக்கும். எனவே இந்த மாதம் 28 அல்லது 29 தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழியத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் மழை
கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் 1ஆம் தேதி பருவமழை துவங்கும். சில தடவை வலுவான காற்று காரணமாக 5 நாள்கள் வரை பருவமழை தள்ளிப்போனதும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஒருவாரம் தள்ளி பருவமழை தொடங்கியது.

எல்நினோ ஆபத்து நீங்கியது
பருவமழையை வெகுவாக பாதித்த எல் நினோ ஆபத்து இல்லை என்றும் எனவே பருவமழை பொய்த்துவிடும் என அச்சப்படத் தேவையில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு ஏமாற்றாது என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு தமிழக மக்கள், விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் அமைந்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications