கேரளா எம்.பி இ.அகமது மறைவுக்கு லோக்சபாவில் இரங்கல் - உறுப்பினர்கள் மவுன அஞ்சலி
மறைந்த எம்.பி இ.அகமது மறைவிற்கு லோக்சபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவையை ஒத்திவைக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
டெல்லி: மாரடைப்பினால் மரணமடைந்த கேரளா மாநில எம்.பி இ. அகமது மறைவுக்கு லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் குறிப்பு வாசித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்தார். பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜூன கார்கே எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகருடன் கார்கே வாக்குவாதம் செய்தார். அகமது மூத்த நாடாளுமன்றவாதி. பணியில் இருந்தபோதே அகமது மரணமடைந்தார் எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார் கார்க்கே
கார்கேவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். பட்ஜெட் இருப்பதால் அவையை ஒத்திவைக்கவில்லை என்று கூறிய சுமித்ரா மகாஜன் அகமதுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நாடாளுமன்ற அலுவல் கிடையாது என்று கூறினார்.
பலத்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே பட்ஜெட்டை திட்டமிட்டபடி தாக்கல் செய்தார் அருண் ஜெட்லி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications