Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டில் 2.1 லட்சம் போலி நிறுவனங்கள்.. சொத்துக்களை அடையாளம் காண மத்திய அரசு அதிரடி உத்தரவு

போலி நிறுவன சொத்துக்களை அடையாளம் காணுவது தொடர்பாக, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை சட்டத்துறை இணை அமைச்சர் சவுத்ரி இன்று அரசு பிரதிநிதிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முடக்கப்பட்ட 2.1 லட்சம் போலி நிறுவன சொத்துக்களை அடையாளம் காண மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய அளிக்கப்பட்ட 50 நாள் அவகாசத்தின்போது 2,138 போலி நிறுவன கணக்குகளில் மொத்தம் ரூ.1,321 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 2.1 லட்சம் போலி நிறுவன பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது.

சிக்கிய நபர்கள்

சிக்கிய நபர்கள்

இவற்றில் பெரும்பாலானவை நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாதவையாகும். பல இயக்குநர்கள் சிக்கினர் பல இயக்குநர்கள் சிக்கினர் இதையடுத்து நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாக 1,06,578 இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெயர்கள் வெளியீடு

பெயர்கள் வெளியீடு

இவ்வாறு முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பெயர்களை அந்த போலிகளை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வகையில் மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் வெளியிட்டது.

சசிகலா நிறுவனங்கள்

சசிகலா நிறுவனங்கள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, தொழிலதிபர் யூசுப் அலி ஆகிய பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இதில் சசிகலாவின் போலி நிறுவனங்கள் பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அரண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஆகும்.

அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

இந்த நிலையில் மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை சட்டத்துறை இணை அமைச்சர் சவுத்ரி இன்று அரசு பிரதிநிதிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், போலி நிறுவனங்களின் சொத்துக்களை அடையாளம் காணும்படி மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார். நில ஆவணங்கள் அனைத்தும், தெளிவாக இருப்பதால் மாநிலங்களுக்கு இதை கண்டுபிடிக்க வெகு நாட்கள் ஆகாது என்று சவுத்ரி நம்பிக்கை தெரிவித்தார். கருப்பு பணத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் வேகம் காட்ட இந்த நடவடிக்கை உதவும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+