For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் பண்ணுங்க.. மத்திய அரசுக்கு சு.சுவாமி கோரிக்கை

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

    டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் அனைவரும் விடுவிப்பு என்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

    Subramanian swamy appeals Central government to file in HC

    இந்த வழக்கில் அதிகம் முனைப்பு காட்டியவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் இந்த வழக்கில் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்தார்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராசாவிடம் விசாரணை நடத்த பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி கடந்த 2010-ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அவ்வாறு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP Senior leader Subramanian Swamy says in twitter that Govt must prove its bonafides by filing an immediate appeal in High Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X