For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் பெண்களிடம் பாலியல் சீண்டல்.. இதெல்லாம் சகஜம்தான்.. சொல்வது கர்நாடக போலீஸ் அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் கூட, கூட்ட நெரிசல்களில் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர், எம்.ஜி.ரோடு பகுதியில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சில விஷமிகள் பாலியல் சீண்டல்கள் செய்தனர். அதுகுறித்த போட்டோக்கள் செய்தித்தாளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Such incidents do happen, says Karntaka home minister on molestation of girls

இந்த நிலையில், நிருபர்கள் இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எவ்வளவுதான் பாதுகாப்பு செய்து கொடுத்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து விடுகிறது. புத்தாண்டாக இருக்கட்டும் அல்லது கிறிஸ்துமசாக இருக்கட்டும், இதுபோன்ற சீண்டல்களை தடுப்பது பெரும் சிரமமாக உள்ளது.

நமது நாட்டு இளைஞர்கள் மனதில் மேற்கத்திய கலாச்சார மோகம் ஊறிப்போயுள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண்களை போல அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு வருகிறார்கள். எனவே பாலியல் சீண்டல்களும் நடக்கிறது. இதை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு பரமேஸ்வர் தெரிவித்தார்.

English summary
Such incidents do happen, says Karntaka home minister on molestation of girls that happened at Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X