பதற்றம்! காங்கிரஸ் வேட்பாளர் பேசும்போது திடீர் துப்பாக்கி சூடு! மணிப்பூரில் ஒரே வாரத்தில் 3வது முறை

Subscribe to Oneindia Tamil

மணிப்பூர்: மணிப்பூரில் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத்தின் போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

Sudden shooting During Congress Candidate s Public Meeting in Manipur


அதில் மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே இன்னர் மணிப்பூர், அவுட்டர் மணிப்பூர் என மொத்தம் இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கே இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.

துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே மணிப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது அங்கே வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

அங்கே காங்கிரஸ் வேட்பாளர் ஆல்பிரட் கங்கம் ஆர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உக்ருல் மாவட்டத்தில் உள்ள டீனெம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்தர் பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரே அவர்கள் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. வெறுமன துப்பாக்கிச் சூடு ஒலியை ஏற்படுத்தும் blank fireஐ பயன்படுத்தியது தெரிய வந்தது.

முதல்முறை இல்லை: காங்கிரஸ் வேட்பாளர் ஆத்தரின் பிரச்சார கூட்டத்தில் இதுபோல தாக்குதல் நடத்துவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே இரண்டு முறை அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்த முயன்ற நிலையில், இப்போது மூன்றாவது முறையாக இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தேசிய செயலாளர் ஸரிடா லைட்ப்லாங் தனது எக்ஸ் பக்கத்தில், "அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளரைக் குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதுபோல மீண்டும் மீண்டும் நடக்கும் தாக்குதல் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் முயற்சி. இது பெரும் கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காங்கிரஸ் வலியுறுத்தல்: உடனடியாக இதில் தலையிடவில்லை என்றால் நமது தேர்தல் செயல்முறைக்கே அபாயம் ஏற்படும்" என்று பதிவிட்டுத் தேர்தல் ஆணையத்தின் பக்கத்தையும் டேக் செய்துள்ளார். அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே மேகசந்திரா வலியுறுத்தி உள்ளார்.

இந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஆர்தர் மீது தாக்குதல் நடக்கிறது. கடந்த திங்கள்கிழமை இதே காங்கிரஸ் வேட்பாளர் ஆர்தர் பயோரி ஷிரூய் கிராமத்தில் உள்ள டிகே உட்லேண்ட் ரிசார்ட்டில் ஆல்ஃபிரட் பிரச்சாரம் செய்த போது மர்ம நபர்கள் அவரை தாக்கியுள்ளனர். அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் அவரை குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+