விக்னேஷ் தற்கொலைக்காக 'நாம் தமிழர்' கட்சிக்கு தடை.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு #vignesh
டெல்லி: நாம் தமிழர் கட்சியை தடை செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் ரீகன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். விக்னேஷ் என்ற தொண்டர் தீக்குளித்து இறந்த நிலையில், இவ்வாறு ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி தொடர்பான கலவரத்தின்போது, தமிழர் உடமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தமிழக லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் சென்னையில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியின்போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளம் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்தார். சிகிச்சை பலன்றி விக்னேஷ் நேற்று உயிரிழந்தார். இவரது மரணம் பல்வேறு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தீக்குளித்து தொண்டர் உயிரிழந்த நிலையில், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என ரீகன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விக்னேஷ் உயிரிழந்தது திட்டமிட்டதாக இருக்கலாம் என அதில் புகார் தெரிவித்துள்ளார்.
பேரணியில் பலர் பங்கேற்றபோதும் விக்னேஷை காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் புகாரில் ரீகன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications