சென்ச்சுரி போட்ட வெயில்: அப்படியே 'ஷாக்' ஆகி நிற்கும் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பெங்களூரில் வெயில் சென்ச்சுரி போட்டுள்ளது மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.
குளு குளு என்று இருக்கும் பெங்களூரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை காலம் துவங்கிவிட்டது. முன்கூட்டியே கோடை காலம் துவங்கியது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது. பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர்களால் வெயில் கோரத்தாண்டவம் ஆடுவதை பார்த்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. கோடையில் நாங்கள் ஸ்வெட்டர் போன்று திரிந்த காலம் போய் தற்போது வெயிலை தாங்க முடியாமல் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டியுள்ளதே என்று வருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் வெயில் சென்ச்சுரி போட்டுள்ளது. பெங்களூரில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயில் சென்ச்சுரி போட்டு வரும் நிலையில் பூங்கா நகரமான பெங்களூரில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது மக்களை வியக்க வைத்துள்ளது.
ஏற்கனவே வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அஸ் உஸ் என்று புலம்பி வருகையில் சூரியன் நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது பெங்களூர்வாசிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது. பெங்களூரில் கோடையிலும் சாரலும், சில்லென்று காற்றுமாக இருந்த காலம் போய் அனல் காற்று வீசி மக்களை வறுத்தெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications