சுனந்தாவின் மர்ம மரணம் திட்டமிட்ட படுகொலை: சுப்ரமணிய சுவாமி குற்றச்சாட்டு
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என குற்றஞ்சாட்டியுள்ளார் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளருடன் தனது கணவரும், மத்திய அமைச்சருமான சசிதரூருக்கு தொடர்பு உள்ளது என டுவிட்டர் மூலம் தனது குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார் அவரது மனைவி சுனந்தா. தொடர்ந்து இது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், நேற்று முன்தினம், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சுனந்தா.

நேற்று நடைபெற்ற அவரது பிரேத பரிசோதனையில் சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை வெளிவர இரண்டு தினங்கள் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், சுனந்தாவின் மரணம் முன்கூட்டியே திட்டமிடப் பட்ட படுகொலை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தலைவர் கூறியிருப்பதாவது :-
'அவரது உடலில் உள்ள காயங்கள், இந்த வழக்கு போகும் பாதை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இது திட்டமிட்ட கொலையாகவேத் தெரிகிறது. என்ன உண்மை என்பதை நாம் அறிய வேண்டும். யார் அவரைப் பாதித்தது, காயப்படுத்தியது, யாரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும் ' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications