For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டம் வாபஸாகுமா?... 'வேகன் ஆர்' காருக்குள் அமைச்சர்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடத்தி வரும் தர்ணா போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி அலைகள் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் இன்று மாலையில் தனது அமைச்சர்களுடன் தனது மாருதி வேகன் ஆர் காருக்குள் அமர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தினார். இதனால் போராட்டம் வாபஸமாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சியினர் போலீஸாருடன் திடீர் மோதலில் ஈடுபட்டனர். போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கியதால் பரபரப்பு கூடியது. தொண்டர்கள் போலீஸ் தடுப்பையும் உடைக்க முயன்றதால் போலீஸார் லேசான தடியடி நடத்த வேண்டியதாயிற்று.

sitting

தொண்டர்கள் அமைதி காக்குமாறு மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

நேற்று முதல் இங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் மாலையில் தனது வேகன் ஆர் காருக்குள் அமைச்சர்களுடன் ஆலோசனையில் குதித்தார் கெஜ்ரிவால்.

English summary
As his supporters clashed with the police in the heart of Delhi, Chief Minister Arvind Kejriwal held a cabinet meeting with his six ministers in his blue Wagon-R at the venue of his sit-in protest. The ruling Aam Aadmi Party or AAP tried to distance itself from supporters who threw stones at riot police and tried to break through barricades that are sealing off the protest site outside the home ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X