திருமணம் செய்யாமல் ஆணுடன் வாழும் பெண்களைப் பாதுகாக்க புதிய நெறிமுறைகள்- சுப்ரீம் கோர்ட்

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தனியாகத் தவிக்க விட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது.
அதிரடி தீர்ப்பு
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பில், திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவமும் அல்ல. இதுபோல் சேர்ந்து வாழ்வோருக்கு வெளிநாடுகளில் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்படுகிறது.
திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
புதிய நெறிமுறைகள்
இந்நிலையில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நீதிபதி பினாகி சந்திர கோஷ் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய நெறிமுறைகளை அளித்துள்ளது.
நிதி திரட்டுவது, வீட்டுக்குரிய ஏற்பாடுகள், பொறுப்பு ஒப்படைத்தல், பாலியல் உறவு, குழந்தை வளர்ப்பு, வெளிப்படையாகப் பழகுதல் போன்றவற்றை ஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கருதலாம்.
கூட்டு வங்கிக் கணக்கு, இருவரது பெயரிலும் அசையா சொத்துக்களை வாங்குவது அல்லது பெண்ணின் பெயரில் வாங்குவது, வர்த்தகத்தில் நீண்ட நாள் முதலீடு, இருவரின் பெயரிலோ அல்லது ஒருவரது பெயரிலோ பங்குகளை வாங்குவது, வீட்டு பராமரிப்பு, சமையல் செய்வது, பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது, நீண்டநாள் நட்பு போன்றவற்றையும் ஆண்-பெண் இருவர் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கூற முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications