பொன்முடி, சுரேஷ் ராஜன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!

1996-2001 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துககு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி, சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. 2006ஆம் ஆண்டு பொன்முடியையும், 2010 ஆம் ஆண்டு சுரேஷ் ராஜனையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணையில் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், அதனை மீறி இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசின் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கவும், சுரேஷ் ராஜன் மீதான வழக்கை கடலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, ரகுபதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில் கடந்த மாதம் முன்னாள் அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications