தமிழக அரசு மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்றும் ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை; அரசியல் அமைப்பின் நோக்கத்துக்கு விரோதமாக இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது; கண்டனங்கள் தெரிவித்தது.
மேலும், மாநில சட்டசபை நிறைவேற்றும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால், மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது, ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் இருக்கிறதா?
மாநில அரசின் அதிகாரத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா? அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை.
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாக இருக்கிறது.
- தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுய்பி வைத்தது சட்டவிரோதம்.
- தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன
- தமிழ்நாடு அரசு 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும்.
- ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி சுயேட்சையாக செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
- மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்
- தமிழக அரசின் மசோதாக்கள் சிலவற்றுக்கு 3 வாரத்திலும் மற்றவைகளுக்கு ஒரு மாதத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும்.
- ஆளுநர் ரவிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவே முடியாது; நிர்பந்திக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிப்பு.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications