ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் யாருமே ஹவுஸ் அரெஸ்ட் இல்லை- ஆளுநர் சின்ஹா திட்டவட்ட மறுப்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை துணை நிலை ஆளுநர் சின்ஹா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வீட்டு சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மெகபூபா முப்தியின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் படங்களை மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டிருந்தது.

இதேபோல தாமும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா)வும் எக்ஸ் பக்கத்தில் படங்களைப் பதிவிட்டிருந்தார்.

ஆனால் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சின்ஹா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் சின்ஹா கூறுகையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது. எந்த ஒரு தலைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்படவும் இல்லை- கைது செய்யப்படவும் இல்லை. இது வதந்திகளை பரப்புகிற முயற்சிதான் என தெரிவித்துள்ளார்.
#WATCH | On reports of J&K leaders put under house arrest ahead of SC verdict on abrogation of Art 370, LG Manoj Sinha says, "This is totally baseless. No one has been put under house arrest or arrested due to political reasons in J&K. It is an attempt to spread rumours." pic.twitter.com/CHvRh28Pu1
— ANI (@ANI) December 11, 2023
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications