இந்தியாவின் அதிரடி ஆபரேசன் எதற்காக தெரியுமா?: விளக்கிய வெங்கய்யா நாயுடு #SurgicalStrikes

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். காஷ்மீரின் யூரி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

surgical strike in PoK: Venkaiah Naidu explains in Twitter

காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

வெங்கய்யா நாயுடு விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது ஏன் என மத்திய அமைச்சர் வெங்கய்யா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவே தாக்குதல் நடத்தியதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீரின் யூரி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனியாவது இந்திய மீதான தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாடு பிரதமர் மோடி மற்றும் ராணுவத்தின் கையில் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்குத்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் எனவும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யூரி ராணுவ முகாமை பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய தரப்பு அதிரடியாக செயல்பட்டுள்ளது. இந்திய விமான படை நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 1999ல் நடந்த கார்கில் போருக்கு பின் பாகிஸ்தான் மீது தற்போது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+