For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்துக்கு மத்திய அரசு எழுதிய கடிதங்களில் லலித் மோடி புகாருக்கான பதில் இருக்கிறது: ப.சிதம்பரம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இங்கிலாந்துக்கு மத்திய அரசு எழுதிய கடிதங்களை வெளியிட்டால் அதில் லலித் மோடி தெரிவிக்கும் புகார்களுக்கான பதில்கள் இருக்கின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி லண்டனில் தலைமறைவாக இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு விசா விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதால் அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு பேட்டியளித்த லலித் மோடி, தமக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவிடாமல் ப.சிதம்பரம் சதி செய்தார்- நாடு கடத்த முயற்சித்தார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ப.சிதம்பரம், லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும். உடனடியாக அந்தக் கடிதங்களை வெளியிடுக எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Former Finance Minister P Chidambaram today said letters written to British authorities on Lalit Modi case during UPA rule should be released as they will answer the former IPL Commissioner's accusations against him and Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X