ட்விட்டரில் மகள் பற்றி பதிவான தகவலால் சுஷ்மா சுவராஜ் ஆத்திரம் !
டெல்லி : தனது மகள் பற்றி ட்விட்டரில் ஒருவர் தெரிவித்த கருத்தால் சுஷ்மா ஸ்வராஜ் ஆவேசமடைந்தார். பின்னர் அந்த கருத்து நீக்கப்பட்டுவிட்டது.
ஊழல் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி தனது மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக போர்ச்சுகல் செல்ல இங்கிலாந்து தூதரகம் மூலம் விசா பெறுவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சுஷ்மா சுவராஜ் ஆதாயத்துடன் உதவியதாகவும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ட்விட்டரில் சுஷ்மா சுவராஜ் பற்றி, "சிலருக்காக சாதகமாக செயல்படுவது சுஷ்மா சுவராஜுக்கு புதிய விஷயம் அல்ல. தனது மகளைக் கூட அவர் வடகிழக்கு மாநில இடஒதுக்கீட்டில்தான் மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்தார்" என்று ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுஷ்மா சுவராஜ் உடனடியாக டுவிட்டரில் "எனது மகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் படித்தவர். நீங்கள் சொல்வது முற்றிலும் தவறான தகவல்" என்று பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து டுவிட்டரில் அவருடைய மகள் பற்றி பதிவான தகவல் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டது.
எனினும் அந்த தகவல் மற்றவர்களால் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் தொடர்ந்தது. இதுபற்றி சுஷ்மா சுவராஜின் ஆதரவாளர்கள், குரைக்கிறவர்களைப் பற்றி என்று ட்விட்டரில் ஆறுதல் அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications