அடுத்தடுத்து 5 அவதூறு வழக்குகள்.. உச்ச நீதிமன்றத்துக்கு ஓடுகிறார் சு.சுவாமி
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தம் மீது அடுத்தடுத்து 5 அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை விமர்சித்து பேட்டி கொடுத்தும் இழிவாக சித்தரித்து ட்விட்டரில் பதிவுகளையும் போட்டு வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் அவர் மீது அடுத்தடுத்து அவதூறு வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமி மீது இதுவரை 5 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தம் மீதான அவதூறு வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, எனக்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்காக காத்திருக்கிறேன். அந்த சம்மன்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன்.
இப்படி என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து போடுவது என்பது அதிகார துஷ்பிரயோகம் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications