கிரிக்கெட்: டி20 தொடரை இந்தியா 'ஒயிட்வாஷ்' செய்தது எப்படி? - 5 முக்கிய காரணங்கள்
மும்பையில் ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 3-0 என்று டி20 தொடரை கைப்பற்றியது.
ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்று வென்ற இந்தியா, டி20 தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்தியாவின் அபார தொடர் வெற்றி குறித்த 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.
- 35 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா: உலகின் அதிகவேக சதம் சமன்
- ரோகித் சர்மா: ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதம் அடித்து சாதனை
- இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா - 5 சுவாரஸ்யங்கள்
தன்னம்பிக்கையின்றி காணப்பட்ட இலங்கை அணி
டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில் தோற்று இரண்டு டெஸ்ட்களை சமன் செய்த இலங்கை, ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்று தோல்வியடைந்தது. இதனால் சற்றே நம்பிக்கை குறைவுடன் காணப்பட்ட இலங்கை அணியால் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இந்த தொடரில் மட்டைவீச்சு மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு அம்சங்களிலும் இலங்கை சிறப்பாக செயல்படவில்லை.
இந்திய மட்டைவீச்சாளர்களின் அதிரடி
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேனான ரோகித்சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இந்த போட்டியில் 88 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இதுவே காரணமாக அமைந்தது.
இளம் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு
மூன்றாவது டி20 போட்டியில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறாத சூழலிலும், இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் நன்றாக பங்களித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். இளம் பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் உனட்கட் ஆகிய இருவரும் மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினர்.
வியூகம் வகுக்க தவறிய இலங்கை
டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரு தொடர்களிலும் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை மட்டை வீச்சாளர்கள் பெரிதும் தடுமாறினர். இதனால் பல போட்டிகளிலும் இலங்கை அணியால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.
இந்திய பந்துவீச்சாளர்களை சந்திக்க எந்த வியூகத்தையும் இலங்கை அணி வீரர்கள் வகுக்கவில்லை.
ரோகித் சர்மாவின் தலைமை
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி இல்லாத நிலையில், தலைமை தாங்கிய ரோகித் சர்மா சிறப்பாக அணியை சிறப்பாக வழிநடத்தினார். பந்துவீச்சை மாற்றுவது மற்றும், பேட்டிங் வரிசை மாற்றம் ஆகியவற்றில் பல போட்டிகளிலும் ரோகித் சர்மா ஏற்படுத்திய மாற்றங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்தது.
பிற செய்திகள்
- காபூல்: உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு
- ஐ.எஸ் அமைப்பின் மையமாக இருந்த மொசூலில் கிறிஸ்துமஸ் பிராத்தனை
- "இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்" - நடந்தது என்ன?
- டாக்ஸி என நினைத்து போலீஸ் காரில் ஏறி சிக்கிய போதைமருந்து கடத்தல்காரர்
- எமிரேட்ஸ் விமானங்கள் துனிசியாவில் தரையிறங்க தடை
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்















Click it and Unblock the Notifications