தாலிபான் ஏற்றுமதியா? குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின்.. ட்விஸ்ட்
காந்தி நகர்: குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், தாலிபான் ஏற்றுமதியாக இது இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டு உள்ளது.
தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் வெற்றிபெற அவர்களின் பொருளாதார பலமும் முக்கிய காரணம். வருடா வருடம் அவர்கள் ஆயுத இறக்குமதி மேற்கொள்வதற்காக பல மில்லியன் டாலர்களை செய்கிறார்கள். இதற்காக போதை பொருட்களை உலகம் முழுக்க விற்பனை செய்து வருகிறார்கள்.
தாலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் அபீன் உள்ளிட்ட போதை பொருட்களை உற்பத்தி செய்து அதை உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தாலிபான்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதுவே தாலிபான்களின் அதீத பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியாவிற்கும் தாலிபான்கள் திருட்டுத்தனமாக போதை பொருள் ஏற்றுமதி செய்ததாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வந்தது.

கைப்பற்றப்பட்டது
இந்த நிலையில்தான் குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த சீக்ரெட் தகவல் மூலம் இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சீக்ரெட் தகவல் மூலம் கடந்த வாரம் முந்த்ரா துறைமுகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் போதை பொருட்கள் பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

எவ்வளவு?
முதலில் இந்த போதை பொருட்களின் மதிப்பு 3500 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. இது முழுக்க முழுக்க ஹெராயின் போதை பொருள் ஆகும். அதன் சந்தை மதிப்பை சோதனை செய்துள்ளார். சோதனையின் முடிவில் உண்மையான மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதை பொருள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபான்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் போதை பொருள் விற்பனை அதிகம் ஆகியுள்ளது. அங்கு அமெரிக்க படைகள் இருந்த போது காணி அரசு போதை பொருட்களை தடை செய்து இருந்தது. ஆனால் மீண்டும் தற்போது இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த போதை பொருட்களுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கும் அல்லது தாலிபானுக்கும் தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களின் ஏற்றுமதியாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சோதனை
இது கந்தகாரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் முழுமையான சோதனைகளை, விசாரணையை முடித்த பின்பே இதில் உண்மை தெரிய வரும். தாலிபான் ஸ்டைலில் இது ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 3 ஆயிரம் கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வாசனை தெரியாமல் இது பேக் செய்யப்பட்டுள்ளது. அதோடு பவுடர் போல கலர் கலராக பேக் செய்துள்ளனர். தாலிபான்கள் இப்படி ஏற்றுமதி செய்வது வழக்கம்.
Recommended Video

முகத்தில் பூசும் பவுடர்
முகத்தில் பூசும் பவுடர் போல இதை மாற்றி, பாட்டில்களில் அடைத்து பேக்கிங் செய்வதை தாலிபான்கள் வழக்கமாக வைத்து உள்ளனர். அதை பின்பற்றி இப்போதும் அவர்கள் போதை பொருட்களை ஏற்றுமதி செய்து இருக்கலாம் என்பதால் தாலிபான்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது தாலிபான்களுடையது என்று உறுதி செய்யப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications