லோன் தர மறுத்ததால் கர்நாடகா வங்கியையே கொள்ளையடித்த 'உசிலம்பட்டி பிரதர்ஸ்'- ரூ.13 கோடி நகைகள் மீட்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தாவணகெரே வங்கி கொள்ளை சம்பவத்தில் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிணறு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளையும் கர்நாடகா போலீசார் மீட்டுள்ளனர்.
கர்நாடகாவின் தாவணகெரே நியாமதி டவுன் பகுதி பாரத ஸ்டேட் வங்கியின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கிக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

கர்நாடகாவை அதிர செய்தது தாவணகெரே கொள்ளை சம்பவம். இது தொடர்பாக நியாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கடந்த 6 மாதங்களாக எந்த துப்பும் துலங்க முடியாமல் கர்நாடகா போலீசார் ரொம்பவே திணறிப் போயினர்.
இந்த நிலையில் நியாமதியில் செயல்பட்டு வந்த பேக்கரி மூடப்பட்டே இருந்ததால் போலீசாரின் பார்வை அந்த பேக்கரி பக்கம் திரும்பியது. இதனையடுத்து பேக்கரி உரிமையாளரை பிடித்து விசாரித்ததில் வங்கி கொள்ளை முடிச்சுகள் அவிழ்ந்தன. பேக்கரியின் உரிமையாளர் உட்பட மொத்தம் 6 பேர் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் உறுதியானது. இதனையடுத்து வங்கி கொள்ளையர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரில் இருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அஜய்குமார், விஜய்குமார் என தெரியவந்துள்ளது. உசிலம்பட்டி சகோதரர்கள்தான், நியாமதியில் பேக்கரி நடத்திக் கொண்டே வங்கி கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுத் தந்தனர். தாவணகெரே வங்கியில் விஜய்குமார், 2 முறை வங்கி கடன் கேட்டிருந்தாராம். ஆனால் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்ததால் தம்பி மற்றும் உள்ளூநர் நபர்களை சேர்த்துக் கொண்டு வங்கியையே கொள்ளையடித்துள்ளார் விஜய்குமார். இவர்களிடம் இருந்து வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கிணறு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த இந்த நகைகள் அனைத்தையும் நியாமதி போலீசார் மீட்டுள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications