குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் பேருந்து! நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்பு
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் கொண்ட சொகுசு பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. இதில் சிக்கி தவித்த 55 தமிழக பயணிகளை பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் கிராமத்தில் பேருந்து வெள்ளத்தில் சிக்கி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. எனவே, இங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை அறியாமல் தமிழக பயணிகளை கொண்ட சொகுசு பேருந்து ஒன்று, தரை பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கியது. இந்த பேருந்து மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 55 தமிழக பயணிகள் இருந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து நல்வாய்ப்பாக அடித்து செல்லப்படாமல் ஒரே இடத்தில் சிக்கியிருந்திருக்கிறது. சுமார் 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், பேருந்தில் இருந்த தமிழக பயணிகளை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
இந்த மீட்பு பணி குறித்து பாவ்நகர் பேரிடர் மேலாண்மைப் பிரிவு துணை மாமலதார் சதீஷ் ஜம்புச்சா கூறுகையில், "தமிழக பயணிகளை கொண்ட பேருந்து, நேற்று மாலை கோலியாக் கிராமத்திற்கு அருகில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோயிலுக்குச் சென்றுவிட்டு, பாவ்நகர் நகரை நோக்கிச் திரும்பிக் கொண்டிருந்தது. அவர்கள் இந்த பக்கம் வரும்போது வெள்ளம் குறைவாக இருந்திருக்கிறது. ஆனால் திரும்ப செல்லும்போது நீரோட்டம் அதிகரித்திருக்கிறது. இதனை உணராத டிரைவர் தரைப்பாலத்தில் பஸ்ஸை இறக்கியுள்ளார்.
பேருந்து பாதி தூரம் பாலத்தை கடந்த பின்னர், வெள்ளத்தில் சிக்கியது. ஆனால் நல்வாய்ப்பாக அடித்து செல்லப்படாமல் ஒரு இடத்தில் சிக்கி நின்றுவிட்டது. பேருந்தின் முன்புறம் வெள்ளத்தில் சிக்கியிருக்க.. பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதனையடுத்து நாங்கள் களத்தில் இறங்கி ஒரு டிரக் கொண்டு அவர்களை மீட்டோம். ஜன்னலை உடைத்து அங்கிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேறினர்" என்று கூறியுள்ளார்.
பேரிடர் மீட்பு படையினரின் முயற்சியால் தாங்கள் உயிர் பிழைத்ததாக பயணிகள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குஜராத் மட்டுமல்லாது, தமிழ்நாட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications