காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லியில் 4வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் பிஆர்.பாண்டியன் தலைமையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாக நீடிக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்துக்குள் அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் கடந்த 26ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4வது நாளாக விவசாயிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications