அயோத்தி ராமர் கோவிலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்டார்.
அயோத்தி ராமர் கோவிலில் அண்மையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு அயோத்தி சென்றார். திறப்பு விழாவுக்குப் பின் முதல் முறையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் பிரதமர் மோடி.

மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி, குடும்பத்துடன் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சென்றார். அயோத்தி ராமர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: "அயோத்தி தாமில் உள்ள பிரபு ஸ்ரீராமரின் பிரமாண்டமான புதிய கோயிலில் பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள எண்ணற்ற பக்தர்களுடன் சேர்ந்து பெற்ற பிரபு ஸ்ரீராமரின் தெய்வீக தரிசனம் ஒரு உணர்ச்சிகரமான தருணம். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். 500 ஆண்டுகால போராட்டத்தின் நீண்ட நசுக்கப்பட்ட கனவும் வெற்றிகரமான முடிவும் பக்தர்களின் கண்ணீர் நிறைந்த கண்களில் தெளிவாகத் தெரிந்தது. ஸ்ரீ ராமர் பாரதத்தின் ஆன்மா மற்றும் தேசிய சின்னம். அவர் மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இல்லாமல் அனைவராலும் நேசிக்கப்படுகிறார், வணங்கப்படுகிறார். அயோத்தி தாமில் உள்ள ராமர் கோயில் நமது தேசிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். அதன் மகத்தான ஆற்றல் வளர்ந்து வரும் புதிய பாரதத்தின் எழுச்சியைத் தூண்டும். நம் மக்களின் நலனுக்காகவும், நம் தேசத்தின் விரிவான எழுச்சிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்." - ஆளுநர் ரவி. இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications