For Daily Alerts
Just In

ஸ்டாலின் சுதந்திர தின உரை: "பல்துறை வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது"
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். அவரின் உரையிலிருந்து சில முக்கிய தகவல்கள்.
- உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது முதல், ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளால் பாதிக்கப்பட கூடாது என்பது வரையிலான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
- இந்திய மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒருதாய் மக்களாக உணர்ந்து பாடுபட்டதால்தான் இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது. ஒற்றுமையால் கிடைத்த சுதந்திரத்தை அதே ஒற்றுமையால்தான் காக்க முடியும். தேசிய கொடியின் நிறம் மூன்றாக இருந்தாலும் மூன்றும் ஒரே அளவோடுதான் ஒன்றிணைந்து இருக்கின்றன.
- வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால் உள்புற ஒற்றுமை என்பது அவசியம். இதுதான் உயிரை கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் கொடுக்கும் உண்மையான அஞ்சலி.
- அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் துணையோடு ஒன்றிய இந்தியாவை வலுப்படுத்துவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். கடந்த ஓர் ஆண்டு காலத்தில் தமிழகம் பல்துறை வளர்ச்சி பெற்றுள்ளது.
- வேளாண்மைத் துறைக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் மூலமாக பாசன பரப்பு அதிகரித்துள்ளது.
- இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் குழந்தைகள் கல்வியை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகமே வியக்கும் அளவிற்கு நடத்தியுள்ளோம். இதேபோல விளையாட்டுத் துறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் இந்த ஓராண்டு காலத்தில் மீட்கப்பட்டுள்ளன.
https://www.youtube.com/watch?v=9RvliVgy_-A
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
Comments
mk stalin independence day 2022 tamilnadu முக ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினம் 2022 திமுக உரை தமிழகம் politics
English summary
Tamil Nadu is a multi-faceted state, CM MK Stalins speech in Independence day