காவிரி தொழில்நுட்ப குழு அறிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி தொழில்நுட்ப குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் உயர் தொழில்நுட்ப குழு பரிசீலனை நடத்தி சுப்ரீம் கோரட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. இந்த அறிக்கைபடி தீர்ப்பு வழங்கப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழகம், அறிக்கை மீது ஆட்சேப மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கைவிடுத்தது.

Tamilnadu government wants to file objection plea over Cauvery technical committee.

இன்று காலை காவிரி நடுவர் மன்ற வழக்கு விசாரணை 2 நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு கோரிக்கை மீது மதியம் முடிவெடுப்பதாக கூறிய நீதிமன்றம், மதியம் 2 மணிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

காவேரி நடுவர் மன்ற உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் ஏற்புடையதா என்பது குறித்து 2மணிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த விவாதத்தின்போது, 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில், காவிரி தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளையும் நடத்த வேண்டும் என்று, கர்நாடகா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnaduu government wants to file objection plea in Supreme court over Cauvery technical committee.
Please Wait while comments are loading...