காவிரி நீர்: திருந்தாத கர்நாடகம்.. திரும்பத் திரும்ப வழக்கு போடும் தமிழகம்.. இன்றும் ஒரு மனு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரியிலிருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்று தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை, இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. கடந்த செப்டம்பர் பங்கான, 22.5 டிஎம்சிக்கு பதிலாக 16.5 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

கர்நாடக அரசு 5.966 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்தில் வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளாதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்து.
கர்நாடகம் போதிய நீர் தரவில்லை என்பதால் உடனடியாக தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications