For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு...கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

ருங்காட்சியம் அமைக்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கனிமொழி உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை சந்தித்து வழங்கினர்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், மதுரையில் தொல்லியல் துறை அலுவலகத்தின் கிளையை ஏற்படுத்த வேண்டும், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

tamilnadu mps to meet central minister prahalad pattil regarding to form keezhadi museum

அதனை மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலை அவரது அலுவலகத்தில் சந்தித்து வழங்கினார்கள். மூன்று எம்.பி.க்களையும் இன்முகத்துடன் வரவேற்ற மத்திய அமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டதோடு அவர் எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தாராம்.

tamilnadu mps to meet central minister prahalad pattil regarding to form keezhadi museum

மேலும், குஜராத்தின் வாட் நகருக்கும், உத்திரப்பிரதேசத்தின் சனோவ்லிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை போல், தமிழகத்தில் உள்ள கீழடிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து வெங்கடேசன் மத்திய அமைச்சரிடம் விரிவாக விளக்கியதுடன் அருங்காட்சியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.

English summary
tamilnadu mps to meet central minister prahalad pattil regarding to form keezhadi museum
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X