காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி!
டெல்லி: மம்தா பானர்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா? இதுதான் இப்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. 1997ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கிய மம்தா பானர்ஜிக்கு, தற்போது மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இந்த யூகத்தை வலுப்படுத்துகின்றன.
மேற்கு வங்கத்தில் தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே மம்தா பானர்ஜி பெரும் சவாலைச் சந்தித்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தில் இருக்க வேண்டிய மம்தா பானர்ஜி, டெல்லியில் இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மம்தா
இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி தனது மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியுடன் டெல்லி சென்றுள்ளார். கடந்த பல மாதங்களாக இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்த மம்தா, திடீரென இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், சோனியா காந்தியுடன் தனியாகச் சந்தித்துப் பேசியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
திரிணாமுல்
கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 294 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அக்கட்சி வெறும் 80 இடங்களை மட்டுமே வென்றது. குறிப்பாக மம்தா பானர்ஜியே தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தனர். ரிதாப்ராதா பானர்ஜி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மம்தாவுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். கட்சியின் கட்டுப்பாட்டை இழந்த மம்தா, இந்தச் சூழலில் காங்கிரஸின் உதவியை நாடுகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அமைப்புகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸுடன் இணைவதே சிறந்தது என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாகவே சொல்கிறார்கள்.
திட்டம் என்ன
இது தொடர்பாகவே சோனியா காந்தியை மம்தா சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது சோனியா காந்தி, மம்தா பானர்ஜிக்கு சில முக்கியப் பொறுப்புகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியும், அபிஷேக் பானர்ஜிக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், மம்தா பானர்ஜியை மாநிலங்களவைக்கு அனுப்பி, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை அவருக்கு வழங்கலாம் என்றும் ஒரு பேச்சும் அடிபடுகிறது. இது குறித்து இரு தரப்பிலும் ஆலோசனைகள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸில் கிளர்ச்சி செய்துள்ள எம்.எல்.ஏக்களின் தலைவரான ரிதாப்ராதா பானர்ஜி, இந்த இணைப்புச் செய்திகளை முற்றிலுமாக மறுக்கிறார். தங்களது தரப்பு எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் இதுபோன்ற இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
என்ன செய்யப் போகிறார்?
மம்தா பானர்ஜி 1997ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, தனது சொந்தக் கட்சியை உருவாக்கி, 15 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டவர். ஆனால், இப்போது அவர் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார். தனது கட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, மீண்டும் காங்கிரஸுடன் சேர்ந்தாக வேண்டி இருக்கிறது. ஆனால், மம்தா என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
தனித்துவிடப்பட்ட மம்தா.. 20 எம்பிக்கள் கூண்டோடு பாஜகவுக்கு ஆதரவு.. திணறும் திரிணாமுல்












Click it and Unblock the Notifications