ஃபேஸ்புக்கில் பால்தாக்கரேவின் தரக்குறைவான போட்டோ போட்ட ஐடி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
புனே: புனேவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த முஸ்லிம் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தவர் மொஹ்சின் சாதிக் ஷேக்(24). அவர் கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் மன்னர் சிவாஜி மற்றும் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே பற்றி தரக்குறைவான புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து சிவசேனா ஆட்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திங்கட்கிழமை அவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்து ராஷ்ட்ரா சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications