சிவன் வேடத்தில் கோவிலில் பூஜை செய்த லாலுமகன் தேஜ்பிரதாப் யாதவ்
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் சிவபெருமான் வேடமணிந்து பூஜைகள் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் லாலு பிரசாத் யாதவ். லோக்சபா தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள் படுதோல்வியைத் தழுவியது.
இதன்பின்னர் அக்கட்சியின் தலைவரான லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமறைவாகிப் போனார். அவரை தேடி கண்டுபிடித்து தருமாறு போஸ்டர் அடிக்கும் நிலை உருவானது.

சர்ச்சைகளில் தேஜ்பிரதாப்
தற்போதுவரை தேஜஸ்வி யாதவ் மறைந்தே இருக்கிறார். இந்த நிலையில் லாலுவின் மற்றொரு மகன் தேஜ்பிரதாப் யாதவ் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்.

புத்தாண்டில் கிருஷ்ணர் அவதாரம்
2017-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கிருஷ்ணன் வேடமணிந்து புல்லாங்குழலுடன் வலம் வந்தார் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். . அந்த படங்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார்.

திருமணத்தில் சர்ச்சை
2018-ம் ஆண்டு தேஜ்பிரதாப் யாதவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களிலேயே விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில் அரசியல் லாபத்துக்காக பலிகடாவாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தற்போது சிவபெருமான் வேடம்
கடந்த ஆண்டு திடீரென சிவபெருமான் வேடத்தில் பாட்னா கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தி பரபரப்பை கிளப்பினார். தற்போது மீண்டும் பாட்னா கோவிலில் சிவனைப் போல வேடமணிந்து பூஜைகள் செய்துள்ளார் தேஜ்பிரதாப் யாதவ்.
சிவபெருமானுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த வேடமணிந்திருக்கிறாராம் தேஜ்பிரதாப் யாதவ்.


Click it and Unblock the Notifications
