மனைவி கர்ப்பமானதால் ஆத்திரம்! துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவர்!
நகரி: தெலுங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், காமா ரெட்டி கூடா பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி(25). இவர் மகேந்தர் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான புதிதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். இந்த நிலையில் சுவாதி கர்ப்பம் ஆனார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே திடீரென குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை வெட்டிக் கொலை செய்தார். பிறகு அவரது உடலை அப்புறப்படுத்த அதை துண்டு துண்டாக வெட்டினார். அவற்றை ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி புறநகர் பகுதியில் இருந்த ஆற்றில் வீசினார்.
இதனிடையே உடலை வெட்டும் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டு, அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு மகேந்தர் ரெட்டி உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டதை பார்த்தனர். இதையடுத்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
ஆற்றில் உடல் பாகங்களை வீசிவிட்டு வந்த மகேந்தர் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் வீசிய உடல் பாகங்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மகேந்தர் ரெட்டியிடம் விசாரணை நடத்தியதில் மகேந்தர் ரெட்டியும் சுவாதியும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே சுவாதி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மகேந்திர ரெட்டி விரும்பவில்லையாம்.
இந்த காரணத்தால் ஏற்கெனவே அவர் ஒரு முறை அந்த பெண்ணின் கருவை கலைத்துள்ளாராம். ஆனாலும் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியை காணவில்லை என்றும் தனது மைத்துனியிடம் (சுவாதியின் தங்கை) மகேந்தர் ரெட்டி தெரிவித்திருந்தாராம். கொலையை மறைக்க இப்படி நாடகமாடியதாக தெரிகிறது.
ஆனால் போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகேந்தர் ரெட்டி உண்மையை தெரிவித்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications