ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் பலி! உமர் அப்துல்லா ஆவேசம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர், 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக இந்த மாத துவக்கத்தில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மாநட்டு கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு சற்றும் குறைவான இடங்களை பிடித்த தேசிய மாநாட்டு கட்சி, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெறாமல் உமர் அப்துல்லா அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. உமர் அப்துல்லா ஆட்சி அமைந்து முழுதாக இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அங்கு புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கந்தெர்பெல் மாவட்டத்தில் உள்ள ககாங்கிர் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளகள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், தான் வெளி மாநில புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து பயங்கராவதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், புலம் பெயர் தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

டெல்லியை அதிர வைத்த சம்பவம்.. மர்ம பொருள் எப்படி வெடித்தது? வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மேலும் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல மருத்துவர் ஒருவரும் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள முதல் கட்ட தகவலின் படி ஒரு மருத்துவர் மற்றும் 5 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் புதிதாக ஆட்சி அமைந்த சில நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், "பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் கோழைத்தனமானது" என்று சாடியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications