10ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தும்: மும்பை ஏர்போர்ட் சுவரில் மிரட்டல்
மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறையின் சுவரில் வரும் 10ம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்தும் என்று யாரோ எழுதி வைத்துள்ளார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முணையத்தில் உள்ள கழிவறை சுவரில் வரும் 10ம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்தும் என்று பேனாவால் எழுதப்பட்டுள்ளது நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் உள்ள சிசிடிலி கேமராக்களை மத்திய பாதுகாப்பு படையினர் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் விமானத்தை தாக்கப் போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் விமான நிலைய சுவரில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
சுவரில் எழுதப்பட்டது பற்றி மும்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ள 4 இந்திய வாலிபர்களும் மும்பை அருகே உள்ள தானேவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மும்பையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications