சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவல்.. உளவுத்துறை எச்சரிக்கை
Recommended Video

டெல்லி: நாட்டின் 72வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி முகமது இப்ராகிம் என்ற இஸ்மாயில், இந்த தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளதாகவும், டெல்லியை இலக்கு வைத்து தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் வழியாக இப்ராகிம் ஊருடுவியுள்ளதாகவும், டெல்லியில் சுதந்திர தின நாளில் அவர் தாக்குதல் நடத்த கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, மத்திய பிரதேச போலீசார், உ.பி மற்றும் டெல்லி போலீசாருக்கு ஒரு எச்சரிக்கைவிடுத்திருந்தனர். அதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின், டெல்லி வருகையின்போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இளைஞர்களை கொண்டு இவ்வாறு அவர்கள் தாக்குதல் நடத்த கூடும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications