For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் சட்டசபை தேர்தல்.. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த வருடம் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி, முதல் கட்டமாக 61 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சி ஏற்கனவே தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சி, முதல்கட்டமாக 19 வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

The congress Party has released its first list of 61 candidates for the upcoming Punjab elections

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 61 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஜிந்தர் கவுர் பட்டால், சுனில் ஜாகர், சரண்ஜித் சானி ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Congress on Thursday released its much-awaited first list of 61 candidates for the coming Punjab assembly elections, with state Congress chief Captain Amarinder Singh picked for the Patiala seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X