For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பான் மசாலா தேடி தப்பி ஓடிய கொரோனா நோயாளி... தனிமைப்படுத்தப்பட்ட நண்பர் குடும்பம்!!

Google Oneindia Tamil News

ஆக்ரா: பான் மசாலாவுக்காக ஆக்ரா மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓடி, தனது நண்பர் வீட்டுக்கு சென்றதால், அவரது வீட்டில் இருக்கும் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். திடீரென அவரைக் காணாமல் மருத்துவமனை ஊழியர்கள் தேடி அலைந்தனர். இறுதியில் அவர் பான் மசாலாவுக்காக தப்பிச் சென்று நண்பர் வீட்டில் இருந்த அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

The Corona patient has escaped from hospital and went to his friend home they also quarantined now

இதுகுறித்து அவரது மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ''பான் மசாலாவுக்காக தப்பிச் சென்று வாங்கி சுவைத்தவர், மேலும் சில பாக்கெட்டுகளை வாங்கி தனது சட்டை பையில் நிறைத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து தனது நண்பர் வீட்டுக்கு சென்றுளார். அவர்களுக்கு இவர் ஒரு கொரோனா நோயாளி என்பது தெரியாது. கொரோனா நோயாளியின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதையடுத்தே அவர் ஒரு கொரோனா நோயாளி என்பது தெரிய வந்துள்ளது. இதனால அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது நண்பரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன? விஜயபாஸ்கர் பேட்டி தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன? விஜயபாஸ்கர் பேட்டி

தற்போது அந்த நோயாளி மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு அதே எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன? விஜயபாஸ்கர் பேட்டி

English summary
The Corona patient has escaped from hospital and went to his friend home they also quarantined now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X