குண்டுகளுடன் உள்ளே வந்த பாக். "டிரோன்".. இந்திய விமான படைத்தளத்திலேயே "அட்டாக்".. எப்படி நடந்தது?
ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் எப்படி அரகேற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் ஸ்டைல் அட்டாக் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இன்று இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இன்று அதிகாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
இரண்டு பேரும் இந்திய விமானப்படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

டிரோன்
இந்த தாக்குதல்கள் டிரோன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்த சிறிய ரக டிரோன்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், ரிமோட் உதவியுடன் இயக்கப்பட்டு நேரடியாக ஜம்மு விமானப்படைத்தளம் நோக்கி வந்துள்ளது.

விமானப்படை
ஜம்முவில் விமானப்படையை குறி வைத்து குண்டு பொருத்தப்பட்ட இந்த டிரோன் இயக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் உதவியுடன் துல்லியமாக விமானப்படை தளம் நோக்கி இந்த டிரோன் வந்துள்ளது.குண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன் நேராக விமானப்படை தளம் நோக்கி வந்து, விமானப்படைத்தளத்தை அடைந்ததும் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு பொருத்தப்பட்ட டிரோன் இயக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

ஜிபிஎஸ்
ரிமோட் உதவியுடன் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வாக பறக்க கூடிய டிரோன் என்பதால் ரேடாரில் சிக்காமல் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த குண்டுகளில் ஒன்று திறந்த வெளியிலும், இன்னொன்று கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியிலும் வெடித்தது. 2016ல் இதேபோல்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பதான்கோட் விமான தளத்தில் டிரோன் அட்டாக் நடத்தியது.

அதே ஸ்டைல்
தற்போது அதே ஸ்டைலில் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. பொதுவாக விமான படைத்தளங்களில் போர் இல்லாத சமயத்தில் தாக்குதல்கள் நடத்தப்படாது. அதையும் மீறி இப்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் ஜம்முவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications