இப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக? மத்திய அரசின் அதிரடி முடிவு!

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Kashmir Issue| இதன் பிறகு காஷ்மீரில் என்னவெல்லாம் நடைபெற வாய்ப்பு உள்ளது?

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

    மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

    அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    நிலம்

    நிலம்

    இந்த சட்டங்கள் நீக்கப்பட்டு இருப்பதால் காஷ்மீரில் இனி யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும். இதற்கு முன் காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க அனுமதி இல்லாமல் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறி உள்ளது. இனி காசு இருக்கும் யாரும் அங்கு நிலம் வாங்க முடியும்.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நேற்றே பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடிவெடுத்து இருக்கிறது. இது தொடர்பாக சிலரின் போன்களுக்கு விளம்பர மெசேஜ்கள் கூட சென்று இருக்கிறது. இதனால் காஷ்மீரில் கொஞ்சம் கொஞ்சமாக பிற மாநில மக்கள் குடியேற வாய்ப்புள்ளது.

    அரசு திட்டம்

    அரசு திட்டம்

    இந்த நிலையில்தான் வரும் நவம்பரில் காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நவம்பர் தொடக்கத்தில் காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

    வேகம்

    வேகம்

    இதன் மூலம் காஷ்மீர் இனி வரும் நாட்களில் வேகமாக முன்னேற்றம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலைகள் நிறைய தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் காஷ்மீரின் முகம் எதிர்காலத்தில் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+