என்ன கருப்பா இருக்க? கிண்டலடித்த கணவன்.. "அதை" கட் பண்ணி வெளியே வீசிய மனைவி.. கொடூரம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை நிலவி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி தனது கணவனை கொலை செய்துள்ளார்.

கொலை

கொலை

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் தன்னுடைய கணவனை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா சோன்வானி எனும் பெண் தனது கணவர் ஆனந்த் சோன்வானியுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நிலவி வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சண்டை உச்சமடைந்துள்ளது.

கைது

கைது

இதனையடுத்து மனைவி சங்கீதா, கணவனை கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சங்கீதாவை கைது செய்து விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "சங்கீதாவுக்கும், ஆனந்துக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆனந்த் தனது மனைவி சங்கீதாவின் நிறம் குறித்து அவதூறாக பேசியதுதான்.

கேலி

கேலி

சங்கீதா கறுப்பாக அழகில்லாமல் இருப்பதாக கூறி ஆனந்த் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார். சங்கீதா இது குறித்து எவ்வளவோ விளக்கமளித்தும், ஆனந்த் இதனை ஏற்க மறுத்துள்ளார். இதனையடுத்து சங்கீதாவும் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சங்கீதா கோடாரி கொண்டு கணவன் ஆனந்தை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பிறப்புறுப்பை

பிறப்புறுப்பை

மேலும் அவரது பிறப்புறுப்பையும் சங்கீதா வெட்டியெறிந்துள்ளார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறைக்கு தெரிய வந்த நிலையில், நாங்கள் சங்கீதாவை கைது செய்துள்ளோம்" என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தான் கறுப்பாக உள்ளதாக கூறி தொடர்ந்து கேலி செய்து வந்த கணவனை மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+