லோக்சபா தேர்தல் செலவீனம்: மாஜி சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் பெங்களூரு அடுத்த சிக்கபள்ளாப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.
இவரை எதிர்த்து மஜத சார்பில் தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும், பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் பச்சேகவுடாவும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

இந்நிலையில் பச்சேகவுடா ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், லோக்சபா தேர்தலில் அதிகபட்சம் ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரையில்தான் செலவிட முடியும் எனஅற கட்டுப்பாடு உள்ள நிலையில் மொய்லி ரூ.73 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும் தேர்தல் ஆணையம் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி பி.எஸ்.பாட்டீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வீரப்ப மொய்லி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications