நாளை முதல் டோல்கேட்களில் மீண்டும் கட்டணம் வசூல்.. பழைய 500 கொடுப்பதற்கு புது ரூல்ஸ்! கியூ கேரண்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் பணமாக கட்டணம் செலுத்துவதில் புதிய கட்டுப்பாடு அமலாகிறது.

புழக்கத்திலிருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்ததை தொடர்ந்து, சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு சில்லரை கொடுக்க முடியாத நிலை உருவாகி பெரும் கியூவை அது ஏற்படுத்தியது. எனவே நவம்பர் 11ம் தேதிவரை சுங்க கட்டணம் கிடையாது என மத்திய அரசு முதலில் அறிவித்தது.

The toll collection on national highways, will resume from the mid-night of December 2

சில்லரை தட்டுப்பாடு நீடித்ததால், பிறகு அது நவம்பர் 14 வரையிலும், பிறகு நவம்பர் 18 வரையிலும், பிறகு நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 2 வரையிலும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் இதில் நீட்டிப்பு செய்யாத மத்திய அரசு, டிசம்பர் 2ம் தேதியான நாளை இரவு முதல் மீண்டும் சுங்க கட்டணத்தை பெற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அதிலும் ஒரு விதிமுறையை புகுத்தியுள்ளது நெடுஞ்சாலைத்துறை. அதாவது, ரூ.200க்கு மேல் சுங்க கட்டணம் கட்ட வேண்டியிருந்தால் மட்டுமே பழைய ரூ.500 ஏற்கப்படும். ரூ.200க்கு கீழுள்ள கட்டணங்களுக்கு சில்லரையாகவே பணத்தை கொடுக்க வேண்டும் என அறிவிப்பில் கூறியுள்ளது.

அரசின் அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் கியூவில் நிற்க வேண்டிய நிலை வரலாம். ஏனெனில் மக்கள் கையில் இப்போது சில்லரை நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை. புதிய 2000 நோட்டுக்கள்தான் கணிசமாக உள்ளது. இதை கொடுத்து சில்லரை பெறும் நேரத்திற்குள் டோல்கேட்டுகளில் கூட்டம் அலைமோதும். இது மீண்டும் பெரும் நெடுஞ்சாலை நெரிசலை ஏற்படுத்திவிடும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The toll collection on national highways, which was halted in the wake of withdrawal of high-value notes, will resume from the mid-night of December 2.
Please Wait while comments are loading...