100 சதவிகித மின்சார வாகனங்கள்தான் இலக்கு! மக்களுக்கு ஆஃபரை அள்ளி வழங்கும் உத்தரப் பிரதேச யோகி அரசு
லக்னோ: 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி உத்தரப் பிரதேசம் நகர்ந்துக்கொண்டிருக்கையில், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மாநில அரசு சில ஆஃபர்களை வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் கடந்த மார்ச் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவு கூடுதல் நிதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது மின் வாகன பயன்பாட்டை பரவலாக்குவதற்கான புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல மாநிலத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆர்டிஓக்களுக்கும் உத்தரவு ஆணை அனுப்பப்பட்டிருக்கிறது. உத்தரவின்படி இந்த சலுகைகள் இன்று முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில முதன்மை செயலாளர் எல்.வெங்கடேஸ்வர்லு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கை 2022 இன் படி உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும். தற்போது மட்டுமல்லாது எதிர்வரும் 2025 மற்றும் 2027ம் ஆண்டுகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் மின்சார வாகனத்திற்கும் இந்த வரி தள்ளுபடி பொருந்தும். பேட்டரிகள், அல்ட்ரா கேபாசிட்டர் கள் என பேட்டரி மூலம் இயங்கும் அனைத்து வாகனத்திற்கும் இது பொருந்தும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications