புல்லரிக்க வைக்கும் தெலுங்கானா நகரம்.. ஊரே கூடி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் அதிசயம்..!
தெலுங்கானாவின் ஜம்மிகுண்டா நகரத்தில் தினமும் தேசியக் கீதம் இசைக்கப்படுகிறது. நகரமே ஒட்டுமொத்தமாக சல்யூட் செய்து வணங்குகிறார்கள்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஜம்மிகுண்டா நகரத்தில் தினமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவது அப்பகுதி மக்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த சுதந்திர தினத்தின்போது ஜம்மிகுண்டா நகரில் தேசியக் கொடியை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முயற்சியின்பேரில் அன்று முதல் தினமும் அப்பகுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
ஒலிபெருக்கிகள் மூலம் காலை 8 மணிக்கு இசைக்கப்படும்போது அவ்வழியாக செல்வோர், அங்கு கடை வைத்திருப்போர், வீட்டில் உள்ளவர்கள் என அனைவரும் தேசிய கீதத்தை மிகுந்த தேசப்பற்றுடன் நின்று பாடி வருகின்றனர்.

பள்ளி குழந்தைகள்
இதுகுறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்துக்கு பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி கூறுகையில், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேசிய கீதம் குறித்து பெரும்பாலும் தெரிவதில்லை. அவர்களின் தேசப்பற்றை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

தினமும் தேசிய கீதம்
அப்போது உதித்தது தான் தினமும் தேசிய கீதம் இசைப்பது என்ற திட்டம். ஜம்மிகுண்டா நகரில் 16 முக்கிய சந்திப்புகளில் முதலில் தேசப்பற்று கொண்ட பாடல்களை காலை 7.45 மணிக்கு இசைக்க தொடங்கினோம்.

நடப்பு நிகழ்வுகள்
தற்போது நாட்டில் நிகழும் விவகாரங்கள் குறித்து நான் பேசுவேன், பின்னர் தேசிய கீதமானது இசைக்கப்படும். இச்சமயத்தில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் நின்று தேசிய கீதத்தை பாடுவர்.

பேதமில்லை
ஜாதி, மத, மொழி, இனம் என எவ்வித பேதமுமின்றி தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் ஆங்காங்கே நின்றபடி எவ்வித சிரமமும் பார்க்காமல் மரியாதை செலுத்துகின்றனர். அதேபோல் தேசிய கொடிக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

குற்றங்கள் குறையும்
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மரியாதை கொடுக்கும்போது தேசப்பற்று வளருவதோடு குற்றங்களைத் தடுக்கவும் இது ஒரு ஆயுதமாகிறது. அனைத்து மக்களும் ஒரே இடத்தில் கூடுவதால் அவர்களது உறவுகள் வலுப்படும். அந்த இடத்தில் கெட்ட எண்ணங்கள் ஒழிக்கப்பட்டு நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்றார்.
மக்கள் வரவேற்பு
போலீஸாரின் இந்த முயற்சியை மக்கள் வரவேற்கின்றனர். ஜம்மிகுண்டா போலீஸாரின் நல்ல முயற்சி என்கின்றனர். தாய் நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இது சிறந்த முயற்சி என்று மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications